இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்ட சமீபத்திய மியூச்சுவல் ஃபண்ட் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான SIP-ன் வரவுகள் ரூ.15,813 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தைகள் அதிக மதிப்பீட்டுப் பகுதிக்கு நகர்ந்தாலும், முதலீட்டாளர்கள் முறையான முதலீட்டுத் திட்டங்களைத் (SIP) தேர்ந்தெடுப்பதற்கான அவர்களின் ஒழுங்குமுறை உத்தி தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதாக தரவு காட்டுகிறது.
Small Cap Fund-கள் ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும், Multi Cap Fund-கள், Mid Cap Fund-கள் மற்றும் Flexi Cap Fund-கள் முந்தைய மாதத்தில் கணிசமான வரவேற்பை பெற்றுள்ளன.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடுகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக உயர்ந்து, 165% உயர்வைப் பதிவு செய்துள்ளன. ரூ.20,245 கோடி வரவுகளில், Themetic Fund- கள் ரூ.4806 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.
துறைசார் ( Sector) நிதி வகையிலிருந்து ஐந்து புதிய நிதிச் சலுகைகள் (NFO) கூட்டாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 2556 கோடியை பெற்றுள்ளன. ஈக்விட்டி வகைகளில் 7 NFO-கள் மூலம் மொத்தம் ரூ.5002 கோடியும், ஒரு Hybrid வகை திட்டத்தின் மூலம் ரூ.2247 கோடியும் திரட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், மீது Mid Cap மற்றும் Small Cap குறியீடுகளுடன் ஒப்பிடுகையில் Large Cap குறியீடுகள் கணிசமான வித்தியாசத்தில் செயல்படவில்லை.