Commodity Market -ல் பிப்ரவரி 2023 மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை வர்த்தகம் செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி வர்த்தகம் செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானது.
Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்றவற்றில் Mini Trading – ஐ MCX அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மட்டுமின்றி Gold, Silver போன்ற Commodity-யிலும் Mini Trading – ஐ MCX வழங்கி வருகிறது. மேலும், ஏற்கனவே Gold Petal, Gold Guniea, Silver Micro போன்ற முதலீடு குறைவான Commodity-களிலும் Trading-ஐ வழங்கி வருகிறது.
கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் ஆர்வம் இருந்தும் அதிக முதலீடு தேவைப்படும் காரணங்களால் வர்த்தகம் செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த Mini Trading சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும் Commodity Market -ல் புதிதாக வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கும் போது Commodity Market பற்றிய முழுமையான புரிதலுடனும், மேற்கண்ட முதலீடு குறைவான commodity stocks – ல் வர்த்தகம் செய்வது நல்லது.