அடுத்த நிதியாண்டில் (2024-25) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை S&P Global செவ்வாய் அன்று 0.4 சதவீதம் அதிகரித்து 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வருடம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளியியல் நிறுவனத்தில் மதிப்பிடப்பட்ட 7.6% Gross Domestic Product (GDP) விரிவாக்க விகிதத்தை விட இது மிகக் குறைவாகவே உள்ளது. “Economic Outlook Asia-Pacific Report,” இல் அடுத்த நிதியாண்டின் வளர்ச்சியை பாதிக்கும் அதிக வட்டி விகிதங்கள், பாதுகாப்பற்ற கடன் மற்றும் குறைந்த நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை எதிர்பார்ப்பதாக S&P கூறியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான வலுவான உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியில் அதிகரிப்பு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் 5.5% ஆக இருந்த Consumer Price Index (CPI) பணவீக்கம் 2024-25ல் 4.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
S&P கணிப்புகளின் படி நுகர்வோர் விலைக் குறியீட்டில் அளவிடப்படும் பணவீக்கம் அடுத்த நிதியாண்டில் குறையும் என்பதால் Reserve Bank of India (RBI) அடுத்த நிதியாண்டில் தான் கொள்கை விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த நிதிப் பற்றாக்குறை வளர்ச்சியைக் குறைக்கும். Reserve Bank of India (RBI) FY25-ல் அதனுடைய வளர்ச்சி 7% ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறது