Low Duration Mutual Funds என்பது பணச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யகூடிய ஒரு வகை (Debt Fund) மியூச்சுவல் ஃபண்டாகும். இந்த நிதிகள் ஒரு வருட முதலீட்டை கொண்ட, குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமானவை இருக்கும்.
இவை Liquid Funds மற்றும் Overnight Funds-களை விட அதிக Maturity- ஐ கொண்டிருக்கும். இந்த நிதிகள் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை 6-12 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கும் மற்றும் வழக்கமான சேமிப்புக் கணக்கை விட சிறந்த வருமானத்தை ஈட்டுவதற்கும் பயன்படுகிறது. இந்த நிதிகளின் சராசரி வருமானம் 6.5 முதல் 8.5% வரை இருக்கும்.