JSW Steel வியாழன் கிழமை அன்று பிப்ரவரி 2024 மாதத்திற்கான ஒருங்கிணைந்த கச்சா எஃகு உற்பத்தி 21.5 லட்சம் டன்களில் ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 20.51 லட்சம் டன் கச்சா எஃகு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இந்த நிறுவனம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய செயல்பாடுகளிலிருந்து இந்த நிறுவனம் பிப்ரவரி 2024-ல் 20.59 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்தது மற்றும் இதற்கு முந்தைய ஆண்டு பிப்ரவரியில் 19.78 லட்சம் டன்களிலிருந்து 4 சதவீதம் அதிகமாகவும் இருந்து இருக்கிறது. பிப்ரவரி 24-ல் இந்திய செயல்பாட்டில் இது 92 சதவீதமாக இருந்தது.
JSW USA -ன் தலைமைச் செயல் அதிகாரியாக Robert Simon நியமித்து JSW ஸ்டீல் அறிவித்துள்ளது. Baytown and Mingo Junction-ல் slab, coil, pipe & plate உற்பத்தி மற்றும் விற்பனையை உள்ளடக்கிய ஒட்டுமொத்த வணிகத்தையும் அவர் வழிநடத்துவார் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனவரியில் JSW ஸ்டீல் லிமிடெட் 2023-24 நிதியாண்டில் அதன் மூன்றாம் காலாண்டு லாபத்தை ரூ. 2415 கோடியாகப் பதிவு செய்தது. இது FY23 இன் மூன்றாவது காலாண்டில் ரூ.490 கோடியுடன் ஒப்பிடுகையில் 392.9 சதவீதம் அதிகமாகும். இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் தான் ரூ. 39,134 கோடியுடன் ஒப்பிடும் போது 7.2 சதவீதம் அதிகரித்து ரூ.41,940 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.