Hybrid Funds என்பது முதலீட்டு திட்டத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பங்கு மற்றும் கடன் கலந்த முதலீடுகள் ஆகும். ஒவ்வொரு கலப்பின நிதியும் வெவ்வேறு வகையான முதலீட்டாளர்களின் பங்கு மற்றும் கடன்களைக் கொண்டுள்ளது.
Hybrid Mutual Funds எப்படி வேலை செய்கின்றன?
கலப்பின நிதியானது ஒரு முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதற்கும் மற்றும் ஒரு சமமான போர்ட்ஃபோலியோவை உருவாக்குகிறது.
முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் நிதி மேலாளர் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி அந்த நிதிகளின் பங்கு மற்றும் கடன்களை வெவ்வேறு விகிதங்களில் ஒதுக்குகிறார். மேலும் இவை சந்தை நகர்வுகளுக்கு சாதகமாக இருந்தால் நிதி மேலாளர் முதலீட்டு அடிப்படையில் சொத்துக்களை வாங்குகிறார் அல்லது விற்கிறார்.
Hybrid Mutual Funds-களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
Hybrid Funds கடன் நிதிகளை விட ஆபத்தாக இருக்கிறது, ஆனால் Equity Fund-களை விட பாதுகாப்பானதாக இருக்கும். இவை கடன் நிதிகளை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது மற்றும் குறைந்த ஆபத்து இருப்பதால் முதலீட்டாளர்கள் இதை விரும்புகின்றன.
மேலும் Equity சந்தைகளில் நுழைவது குறித்து தெரியாத புதிய முதலீட்டாளர்களுக்கு Hybrid Fund-களை நோக்கி திரும்பகின்றனர். முதலீட்டாளர்கள் பங்கு முதலீடுகளில் முதலீடு செய்ய Hybrid Funds அனுமதிக்கின்றன.