நான் வாங்க நினைக்கும் பங்கு தினமும் Upper Circuit அடிப்பதால் என்னால் வாங்க முடியவில்லை அல்லது நான் விற்க நினைக்கும் பங்கு தினமும் Lower Circuit அடிப்பதால் என்னால் விற்க முடியவில்லை. சந்தையில் இந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்காதவர்கள் இருக்க முடியாது.
Circuit Limit ஏன் வைக்கப்படுகிறது இதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Circuit Limit என்பது ஒரு பங்கு ஒரு நாளில் எவ்வளவு ஏறலாம் அல்லது இறங்கலாம் என்பதை குறிக்கிறது. SEBI எனும் அமைப்பு தான் பங்குகளுக்கான Circuit Limit- ஐ முடிவு செய்கிறது. இதன் மூலம் ஒரு பங்கின் விலையானது அளவுக்கு அதிகமாக ஏறுவதும்,இறங்குவதும் தடுக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு 100 ரூபாய் மதிப்புள்ள பங்குக்கு 20% Circuit Limit உள்ளது எனில், ஒரு நாளில் அதிகபட்சமாக 120 வரை ஏறலாம் அல்லது 80 வரை இறங்கலாம். அதனுடைய விலை நகர்வு 80-120-க்குள் தான் இருக்கும்.
Circuit Limit இல்லையென்றால் இந்த பங்கானது மக்களின் வாங்கும் ஆர்வத்தால் ஒரே நாளில் 200 ரூபாய்க்கும் செல்லலாம் அல்லது விற்கும் பொழுது 10 ரூபாய்க்கும் செல்லலாம். ஒரே நாளில் இவ்வாறு விலை மாற்றம் இருக்கும் பொழுது அந்த பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபமா அல்லது நட்டமோ ஏற்படும். இதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் Circuit Limit.
Equity பங்குகளுக்கான Circuit Limit 2-20% வரை பங்குகளை பொறுத்து வேறுபடும். நிப்டி போன்ற Indices-க்கு Circuit Limit 10%,15% மற்றும் 20% என வைக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு அதனுடைய Circuit Limit- ஐ அடைந்தவுடன் வர்த்தகமானது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பின் அடுத்த Circuit Limit- ஐ வைத்து வர்த்தகம் மீண்டும் தொடங்கும்.
1. Upper Circuit.
ஒரு நாளில் ஒரு பங்கு அதிகபட்சமாக எவ்வளவு ஏறலாம் என்பதைக் குறிக்கிறது. இது அந்த பங்கின் முந்தைய நாள் closing price-ஐ வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.
2. Lower Circuit.
ஒரு நாளில் ஒரு பங்கு அதிகபட்சமாக எவ்வளவு இறங்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதுவும் அந்த பங்கின் முந்தைய நாள் closing price-ஐ வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.