ஒரு நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கும் (Debt), அதன் முதலுக்குமான (Equity) விகிதமே Debt to Equity Ratio எனப்படும். ஒரு நிறுவனத்தின் மொத்த முதல் 100 கோடி ரூபாய் என வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் தனியாரிடமிருந்து கடன் பத்திரங்கள், டீபென்ச்சர்கள் ஆகியவை மூலம் வாங்கியுள்ள கடன், வங்கிகளிடமிருந்து வாங்கியுள்ள கடன் எல்லாம் சேர்த்து 200 கோடி ரூபாய் என்றால், அந்த நிறுவனத்தின் Debt to Equity Ratio = 200 /100 = 2:1 ஆகும்.
நிறுவனங்கள் இந்தக் கடன் / முதல் விகிதத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புவார்கள். அதே சமயம் கட்ட முடியும் என்ற நம்பிக்கையும் , திறமையும் நிறுவனத்திடம் இருந்தால் கடன் வாங்கத் தயங்க வேண்டியதில்லை.