எல்லோரும் யோசிப்பத்து போல் யோசிக்காமல், அதற்கு எதிர்மறையாக யோசித்து லாபம் பெறுவதே Contra Investing. ஏதோ ஒரு காரணத்துக்காக Share Market மொத்தமாக சரிந்து இருக்கலாம் அல்லது ஏதாவது நிறுவனத்தின் Shares சரிந்து இருக்கலாம். இதுபோன்ற சமயங்களை தங்குளுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்பவர்கள் தான் கான்ட்ரா இன்வெஸ்டர்கள்.
எல்லோரும் செல்லும் திசையில் செல்லாமல், மாற்று திசையில் செல்வதால் மலிவான விலையில் பங்குகளை வாங்க முடியும். ஏற்கனவே விலை குறைவாக உள்ள Shares-களை வாங்குவதால், அந்த Shares மேலும் கீழே செல்வதற்கு வாய்ப்பு குறைவு. மறுபடியும் பங்கின் திசை திரும்பும் போது லாபம் கிடைக்கும்.
இதிலும் சில Risk-ம் உள்ளன. எல்லோரும் செல்லும் திசையில் செல்லாமல் மாறுபட்டு செல்வதால், நடுக்காட்டில் தனியாக செல்வதுபோல் இருக்கும். இந்த முதலீடு நம்முடைய பொறுமையை ரொம்ப ரொம்ப சோதிக்கலாம். Shares-களை வாங்க வாங்க அந்த Shares-களின் விலை இறங்கி கொண்டே போகலாம். சில துறைகளின் Shares விலை ஏறுவதற்கு நாம் நினைத்ததை விட அதிக காலம் ஆகலாம்.