கடன்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் Debt Funds மூலம் முதலீடு செய்வதால் முதலீட்டின் காலம் வருமானத்தைக் கண்டறிய Medium Duration Mutual Funds முக்கியப் பங்கு வகிக்கிறது.
Medium Duration Fund மூலம் கடன் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தைகளில் நாம் முதலீடு செய்யலாம். இதனால் இந்த ஃபண்டின் Portfolio-வின் மெக்காலே(Macaulay) கால அளவு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை இருக்கும். Overnight Funds, Liquid Funds, Ultra-Short Duration Funds, Low Duration Funds, Money Market Funds and Short Duration Funds போன்றவற்றை விட நடுத்தர கால நிதிகள் அதிக முதிர்வை கொண்டிருக்கின்றன.
ஆனால் நடுத்தர முதல் நீண்ட கால நிதிகள் மற்றும் long duration funds- ஐ காட்டிலும் குறைவான முதிர்வை கொண்டுள்ளன. 3 ஆண்டுகளில் சில நிதி இலக்குகளை அடைய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த நிதிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த நிதிகளின் சராசரி வருமானம் 7% முதல் 9% வரை இருக்கும்.
Medium Duration Mutual Funds-களில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
Medium Duration Fund-ன் நிதி மேலாளர் நிதி முதலீட்டை பணச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் தேர்ந்தெடுக்கிறார். முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் சரியான கடன் நிதியைத் தேர்ந்தெடுப்பதை SEBI இப்போது எளிதாகி உள்ளது. ஒரு நடுத்தர கால நிதியின் Portfolio-வின் Macaulay கால அளவு 3 மற்றும் 4 ஆண்டுகள் வரை இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான முதலீட்டு எல்லைக்கு பொருத்தமானதாக இருக்கும். மேலும் இந்த நிதிகள் இதே காலத்திற்கு ஏற்ப நிலையான வைப்புத்தொகையை (FD) விட சிறந்த வருமானத்தை வழங்கிறது.