Ex-Dividend Date அல்லது Ex-Date என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குபவர் dividend-ஐ பெறுவதற்கு தகுதி உள்ளவரா? அல்லது தகுதியற்றவரா என தெரிந்து கொள்ள நிறுவனத்தால் குறிப்பிடப்படும் தேதி ஆகும். எந்தவொரு நிறுவனத்தின் பங்கையும் நீங்கள் வாங்கியவுடன், அது T+2 நாட்களுக்குப் பிறகுதான் உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். செவ்வாய்கிழமை பங்குகளை வாங்கினால், அவை வியாழன் அன்று உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த செயல்முறையை புரிந்துகொள்ள, ஒரு நிறுவனம் ஜூலை 30 செவ்வாய்க்கிழமை அன்று டிவிடெண்ட் தருவதாக அறிவிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதன் Record Date ஆகஸ்ட் 8 எனில், அதன் Ex-Date ஆகஸ்ட் 7 ஆகும். அதாவது, யாராவது ஆகஸ்ட் 7 அல்லது அதற்கு பிறகு அந்த பங்கை வாங்கினால், அவர்கள் Dividend பெற தகுதி பெற மாட்டார்கள்.
முதலீடு செய்வதற்கும், Dividend-ஐ பெறுவதற்கும் Ex-date மற்றும் Record Date என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
Record Date:
ஒரு நிறுவனம் அறிவிக்கும் Dividend, போனஸ் ஆகியவற்றை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த உரிமைகள் கொடுப்பார்கள். அந்த குறிப்பிட்ட நாள் தான் Record Date ஆகும். Record Date வரை வைத்திருந்து விட்டு அந்த நாளுக்கு பின்னர் நம் பங்கை
விற்றாலும் Dividend, போனஸ் பங்கு ஆகியவை வழங்கப்படும் போது அது நமக்கு வழங்கப்படும்.