Commodity market – ல் Crude oil – க்கு அடுத்து அதிகமா Trade பண்ணக்கூடிய Stocks எதுன Natural gas தான். Natural gas Trading பற்றி பார்ப்பதற்கு முன்பு Natural gas -ன என்னன்னு பார்ப்போம். Natural gas-என்பது ஒரு இயற்கை எரிவாயு. இறந்த விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள் இவை அனைத்தும் மண்ணில் மக்கி பாறைகளுக்கு அடியில் படிகங்களாக படிந்து மண் மற்றும் உப்பு படிகங்களோடு கலந்து காலப்போக்கில் வெப்பம் மற்றும் அழுத்தத்தால் நிலக்கரியாகவும் பெட்ரோலியம் ஆகவும் Natural gas – ஆகவும் உருமாறுகிறது.
Natural gas நிலத்திலிருந்து மட்டுமல்ல கடலுக்கு அடியில் உள்ள மணல் மற்றும் பாறைகளுக்கு அடியில் இருந்தும் எடுக்கப்படுகிறது. Natural gas மில்லியன் வருடத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு கலரோ மனமோ கிடையாது. Geologist, Natural gas எங்க இருக்குங்கிறத என்பதை Sound and Waves மூலம் கண்டுபிடிச்சு அதை வெளியில எடுக்கறதுக்கான Process பண்றாங்க.
Natural gas – முதன் முதலாக 1785-ல் வணிக மையமாக்கப்பட்டு தெருவிளக்குகள் எரிவதற்கு பயன்படுத்தப்பட்டது. Natural gas, Crude oil மாதிரி Liquid-ஆக இல்லாததனால் Natural gas-க்கு 20-th Century ல Pipeline போட ஆரம்பிச்சாங்க. பிறகு Cooking மற்றும் heating – க்கு பயன்படுத்தப்பட்டது. Natural gas – ஐ 260 degree Fahrenheit பண்ணி Liquefied Natural Gas (LNG) தயாரிக்கிறாங்க. இதனால் 600 மடங்கு Natural gas -ன் Size குறையுது. இது Natural gas – ஐ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு Transfort பண்ண சிறந்த வழியாக இருக்கிறது.
US Country – தான் Natural gas – ஐ அதிகமா பயன்படுத்துறாங்க. 40% Natural gas இண்டஸ்ட்ரிக்கும் கமர்சியலுக்கும் பயன்படுத்துறாங்க. United States, Russia, Iran, Qatar, Canada, China, Sandhi Arabia,… போன்ற நாடுகள் Natural gas Producing Countries – ஆக உள்ளன.
கமாடிட்டி மார்க்கெட்டில் Crude oil – க்கு அடுத்தபடிய அதிகமாக Trading செய்யக்கூடிய Stocks எது என்றால் Natural gas தான். Crude oil மாதிரியே Natural gas-ம் அதிக Moment கொடுக்கக்கூடிய Stocks ஆகும். Natural gas-ம் Crude oil-லும் International Commodity – Stocks என்பதால் NYMEX – ல் எப்படி Trade ஆகுமோ அதே மாதிரி கமாடிட்டியிலும் Trade ஆகும். ONGC-(Oil and Natural Gas Corporation) மற்றும் GAIL-(Gas Authority Of India Ltd) இவை இரண்டும் Natural gas -ன் Major producer ஆக உள்ளன.
USEIA-(US Energy Information Administration) கொடுக்கிற Report, Traders – க்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை EIA-Natural gas – க்கான Inventories Report – ஐ வெளியிடும். அதை கவனித்து Trading- ல் இறங்குவது நல்லது. US Natural gas- ன் Storage அதிகமானால் விலை குறையும். Storage குறைவானால் விலை உயரும்.
Natural gas-ல் Trading செய்ய 70,084 ரூபாய் முதலீடு தேவைப்படும். இதோட Lot Size – 1250 mmBtu (metric million British thermal unit). Natural gas – Contract அடிப்படையில் Trading செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதி Contract expiry- ஆகிவிடும். Natural gas Trading -ல் மார்க்கெட் Moment – ஐ பொருத்து Target – 3 Points மற்றும் Stop Loss-2 Points – ல் வைப்பது நல்லது. ஒவ்வொரு Points – க்கும் 1250 ரூபாய் Profit கிடைக்கும். முக்கியமாக Stop Loss, Set செய்வதை மறக்காமல் இருப்பது நல்லது. இது அதிக Loss ஏற்படுவதை தடுக்கும். Crude oil போன்றே Natural gas-ம் Upward, Downward அதிகம் உள்ள Stocks – ஆகும். எனவே Trading -ல் இறங்கும்போது Natural gas என்ன Trend -ல் இருக்கு எப்ப buy பண்ணனும் எப்ப Sell பண்ணனும் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.